Sunday, May 22, 2011

Article in Dinamalar dt 19052011

தவறுகளை முதலில் சீர் செய்யுங்கள்...: வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்திலிருந்து எழுதுகிறார்: அ.தி.மு.க.,வுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்று. தனக்குக் கிடைத்த வாய்ப்பை, அ.தி.மு.க., தக்க வைத்துக்கொள்ள சில யோசனைகள்... "முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகள்' என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டாமல், அந்தத் தவறுகளை, ஆக்கபூர்வமாக சரி செய்ய வேண்டும். தங்கள் கட்சியினரே, தங்களை நெருங்க முடியவில்லை; குறைகளைச் சொல்ல முடியவில்லை என அங்கலாய்கின்றனர். அம்மாதிரி குற்றச்சாட்டு இனி வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம். எந்த அரசு அலுவலகங்களிலும், அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது, மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, நீண்டகால புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, மணற்கொள்ளையை அறவே தடுத்து நிறுத்தி, புதிய ஏற்பாடுகளை செய்வது. முந்தைய தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட, பல நல்லதிட்டங்களை முடக்காமல், தொடர்ந்து அதை பூர்த்தி செய்வது. சென்னையில் ஓடும் ஆட்டோக்களை மீட்டர் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்வதுடன், அதை, தொடர்ந்து கண்காணிப்பது. இவற்றையெல்லாம் கடைபிடித்தால், எல்லா தரப்பு மக்கள் ஆதரவும் கிட்டும்.

http://http://epaper.dinamalar.com/DM/DINAMALAR/2011/05/19/ArticleHtmls/19_05_2011_008_021.shtml?Mode=0

Sunday, May 1, 2011

En Kural - Dinamalar dt 01042011



வி.வெங்கட்ராமன்பெரம்பூர், சென்னை:கிரைண்டர், மிக்சி போன்ற லஞ்சம் வேண்டாம். சென்னையில் ஓடும் ஆட்டோக்களில், மீட்டர் அடிப்படையில் வாடகை வசூலிக்கப்படும் என, வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு தான், எங்கள் குடும்ப ஓட்டு.

http://www.dinamalar.com//News_Detail.asp?Id=216512&&